For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தருமபுர ஆதீனம் இன்று இரவு பட்டினப் பிரவேசம்... காலையிலேயே கறுப்பு கொடியுடன் இடதுசாரிகள் போராட்டம்!

Google Oneindia Tamil News

தருமபுரம்: தருமபுர ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேசம் இன்று இரவு நடைபெறுகிறது. ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Recommended Video

    பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா இதில் அரசியல் வேண்டாம் - தருமபுர ஆதீன மடாதிபதி

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல் அடுத்த அதிர்ச்சி! ஆண்நண்பருடன் பேசிய விதவை கூட்டு பலாத்காரம்.. நாமக்கல்லில் 4 பேர் கொடூரச்செயல்

    இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று நாற்காலி பல்லக்கு பிரவேசம் நடைபெற்றது. ஆதீனத்தில் சொக்கநாதர் சந்நிதியில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினார். பின்னர் கட்டளைத் தம்பிரான்கள் புடைசூழ நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தர் வலம் வந்தார். பின்னர் சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தடையும் தடை நீக்கமும்

    தடையும் தடை நீக்கமும்

    இதனைத் தொடர்ந்து இன்று இரவு குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது.அப்போது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் சம்பந்த பரமாச்சாரியார் சிவிகை பல்லக்கில் வீதி உலாவும், தொடர்ந்து ஞான கொலு காட்சியும் நடைபெறுகிறது. இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்து பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மீண்டும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

    இன்று பட்டினப் பிரவேசம்

    இன்று பட்டினப் பிரவேசம்

    இதனால் இன்றைய ஆதீனத்தின் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆதீனம் சார்பில் 10,000 பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அரசியலாக்க வேண்டாம்

    அரசியலாக்க வேண்டாம்

    இதனைத்தொடர்ந்து ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இது ஒரு ஆன்மீக நிகழ்வு; இதனை அரசியல் ஆக்காமல் கொண்டு செல்வதற்கு ஆதீனம் பாதை வகுத்துள்ளது. திரளான பக்தர்கள் சிவனடியார்கள் இவ்விழாவில் பங்கேற்க வேண்டும்; இந்த நிகழ்வை முன்னிட்டு 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

    பட்டின பிரவேசத்துக்கு எதிர்ப்பு போராட்டம்

    பட்டின பிரவேசத்துக்கு எதிர்ப்பு போராட்டம்

    இதனிடையே தருமபுர ஆதீனத்தின் பல்லக்கு நிகழ்ச்சியான பட்டினப் பிரவேசத்தில் தமிழக பாஜகவினர் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்திருக்கிறார். அதேநேரத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் இன்று போராட்டம் நடத்தினர். மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் இந்தப் போராட்டத்தை இன்று நடத்தினர்.

    English summary
    Dharmapuram Aadheenam will hold Pattina pravesam on today night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X