For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்.எல்.சி. பெயர் மாற்றத்தைக் கண்டித்து ஆக.22-ல் தி.க. போராட்டம்: வீரமணி

By Mathi
Google Oneindia Tamil News

விருத்தாசலம்: என்.எல்.சி. பெயர் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை வெறும் என்.எல்.சி. என மாற்றியுள்ளது மத்திய அரசு. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

DK to protest against NLC name changing

வெளிமாநிலத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்காகவே இந்த பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய தி.க. தலைவர் வீரமணி, என்.எல்.சி. பெயர் மாற்றத்தைக் கண்டித்து வரும் 22-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஒத்த கருத்துடைய இயக்கங்களை ஒன்றிணைத்து என்.எல்.சி. தலைமை அலுவலகம் முன்பாக இந்த போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.

English summary
DK leader K Veeramani said that his movement will hold protest against NLC name changing on Aug. 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X