For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று தேர்தல் முடிவு... டுவிட்டரில் ஆல் இஸ் வெல் போட்ட ஜெ. அன்பழகன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன, இன்னும் சற்று நேரத்தில் மக்களின் ஆதரவு யாருக்கு என்ற சஸ்பென்ஸ் உடைந்து விடும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பதை பதைப்போடு தங்களின் முடிவு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடவுளை வேண்டிக்கொண்டு காத்திருக்கின்றனர்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி வேட்பாளரும் சிட்டிங் எம்.எல்.ஏவுமான ஜெ. அன்பழகன் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார். வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் 'ஆல் இஸ் வெல்' என்று பதிவிட்டுள்ளார். சென்டிமெண்ட் ஆக ஜெ. அன்பழகன் ஜெயித்தால் திமுக தோற்றுவிடும். இவர் யாருக்கு ஆல் இஸ் வெல் சொன்னாரோ?

இன்றைய தேர்தல் முடிவு விஜயகாந்தை எப்படி டென்சனாக்கும் என்றும் சில வலைஞர்கள் குசும்பாக பதிவிட்டுள்ளனர். வைகோ வீட்டு வாசலில் விஜயகாந்த் எப்படி காத்திருப்பார் என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை களத்தில் இருந்து எப்படி செய்தியாளர்கள் தருகின்றனர் என்பதை கிண்டலடித்து ஒரு வலைஞர் பதிவிட்டுள்ளார். செந்தில், கவுண்டமணி குரூப் ஈயம் பூச கிளம்புவது போல மீம்ஸ் போட்டுள்ளனர்.

English summary
The political analysts are extremely confused and confounded about the outcome this election. There seems no anti-incumbency on the grounds. Except for Chennai, rest have also forgotten about the floods. If they wished for a change, DMK could come to power otherwise Tamil Nadu will remain Amma Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X