For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்களை பிரசாரம் செய்யவே விடாமல் தடுக்கிறது போலீஸ்.. திமுக புகார்

Google Oneindia Tamil News

சேலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவினரை பணி செய்ய விடாமல் தடுக்கும் வகையில் போலீஸார் தொடர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு வருவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

ஏற்காடு இடைத் தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் படு சூடாக நடந்து வருகிறது. அதிமுக சார்பில் சரோஜாவும், திமுக சார்பில் மாறனும் போட்டியிடுகின்றனர்.

திமுகவினர் மீது பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் அடுக்கடுக்காக புகார்களைச் சுமத்தி வருகிறது திமுக.

DMK slams police for slapping false cases against its leaders

இந்த நிலையில், கடந்த 22.11.2013,அன்று, அயோத்தியபட்டணம் ஒன்றியம், காரிப்பட்டி அருந்ததியர் காலனியில் வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த, அ.தி.மு.க, வை சேர்ந்த கோவை புறநகர் மாவட்டம் முன்னாள் செயலாளரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலு மணியை, அங்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருடன் வந்திருந்த தி.மு.க கட்சியை சேர்ந்த சுமார் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் வாக்கு சேகரிப்பதை தடுத்து தகராறு செய்து தாக்க முயன்றதாகவும், கெட்டவார்த்தைகளில் எஸ்.பி.வேலுமணியை அவதூறாக பேசியதாகவும் கூறி நேற்று காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் மனுவை கொடுத்தார்.

அதன்படி இன்று, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட ஐம்பது தி.மு.க வினர் மீது, 341, 294/B, 506/1, ஆகிய பிரிவுகளின் கீழ், (காரிப்பட்டி காவல் நிலைய குற்ற என்- 508/2013)போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் முத்துராமலிங்கம், இது எங்கள் கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் மீது திட்டமிட்டு போடப்படும் பொய் வழக்கு.

தேர்தல் பணியில் சிறப்புடன் செயல்பட்டு, தொகுதி மக்களிடம் அதிமுக ஆட்சியின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி வருவோரை மிரட்டுவதற்காக அதிமுகவினர் பொய்யான புகார்களை கொடுக்கிறார்கள். அதற்கு காவல் துறையினரும் துணை போகிறார்கள்.

எங்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சம்பவம் நடந்த அன்று வாழப்பாடி ஒன்றியத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் காரிப்பட்டிக்கு போகவேயில்லை. அப்படியிருக்க, அவர் அங்கு வந்து அதிமுகசட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணியுடன் சண்டைக்கு போனார் என்று சொல்லுவது முற்றிலும் பொய்யான செய்தி.

இதுகுறித்து, என்ன நடந்தது என்று முறையாக விசாரணை செய்யாமல் போலீசார் வழக்கு போட்டுள்ளது, வரும் 27,ம் தேதி சென்னை உயர் நீதி மன்றத்தில் திமுக சார்பாக போடப்பட்டுள்ள வழக்கை திசை திருப்பி முயற்சியாகும், திமுக வினரும் மோதலில் ஈடுபடுகிரார்கள் என்று கணக்கு காட்டவே போலீசார் முயற்சி செய்கிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு நாங்கள் புகார் அனுப்பியுள்ளோம் என்றார்.

English summary
DMK has charged that police are stalling DMK's election works in Yercaud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X