For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு வர அஞ்சுகிறாரா ரஜினி?

Google Oneindia Tamil News

Recommended Video

    தொடர்ந்து படங்களில் பிசி.... அரசியலை கண்டு அஞ்சுகிறாரா ரஜினி ?- வீடியோ

    சென்னை: தமிழக அரசியல் களத்தில் குதிக்க ரஜினி முடிவு செய்து விட்டாலும் கூட, திடீரென புதிய படம் ஒன்றில் அவர் புக் ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

    அரசியலை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்திருந்தால் புதிய படத்தில் நடிக்க புக் ஆகியிருக்க மாட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ரஜினி தீவிர அரசியலில் குதிக்க அஞ்சுவதாகவும், தயங்குவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

    அவரை பின்னாலிருந்து இயக்குவோரின் திருப்திக்காக மட்டுமே தற்போது அவர் ரசிகர்களைச் சந்திப்பது, நிர்வாகிகளை நியமிப்பது என செயல்படுகிறார். அவரது போக்கில் ஏனோ தானோ அதிகம் மிதமிஞ்சித் தெரிவதாகவும் கருதும் வகையிலேயே அவரது மந்தமான செயல்பாடுகள் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

    எதிர்பார்ப்பு பொய்த்தது

    எதிர்பார்ப்பு பொய்த்தது

    காலா, 2.ஓ ஆகிய இரு படங்களுடன் ரஜினி திரையலுக்கு குட்பை சொல்லி விட்டு அரசியலில் தீவிரமாக குதிப்பார் என கருதப்பட்டது. ரசிகர்களும் கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரஜினி புதிய படத்தில் புக் ஆகியிருப்பது ரசிகர்களுக்கே தர்மசங்கடமாகியுள்ளது.

    இஷ்டத்திற்கு அரசியல்

    இஷ்டத்திற்கு அரசியல்

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஜவ்விழுப்பு இழுத்து புதிய வரலாறு படைத்தவர் ரஜினி. இப்போது அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தும் கூட பழைய மாதிரியே ஜவ்வு மிட்டாயாக இழுத்துக் கொண்டிருக்கிறார். கேட்டால் கட்டமைப்பு, நிர்வாகிகள் நியமனம் என்று ஏதேதோ சொல்கிறார். மனசே இல்லாமல் அரசியலுக்கு அவர் வந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    நடிப்பு ஈஸி

    நடிப்பு ஈஸி

    ரஜினியைப் பொறுத்தவரை அரசியலை விட நடிப்பு ஈஸி என்ற மன நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள். பேசாமல் நடித்து விட்டுப் போய் விடலாமே என்ற எண்ணம்தான் அவரிடம் மேலோங்கியிருப்பதாக சொல்கிறார்கள். அரசியலை அவர் முழுமையாக இன்னும் மனதுக்குள் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    அரசியலை சீரியஸாக எடுத்திருந்தால்

    அரசியலை சீரியஸாக எடுத்திருந்தால்

    ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை சீரியஸாக எடுத்திருந்தால் இப்படி காலம் தாழ்த்த மாட்டார். போர் வரட்டும் என்று அமர்ந்திருக்க மாட்டார். விறுவிறுப்பாக களத்தில் இறங்கியிருப்பார். மறுபக்கம் கமல் செய்து கொண்டிருப்பது அதுதான். அவர் எல்லாவற்றையும் படு வேகமாக திட்டமிட்டு மின்னல் வேகத்தில் களப் பணிகளில் இறங்கியிருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

    இப்போதுதான் பெயரே கேட்கிறார்

    இப்போதுதான் பெயரே கேட்கிறார்

    நேற்று ரஜினி செய்தியாளர்களிடம் பேசும்போது நிர்வாகிகளை சந்தித்தேன், பெயர் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். அவர் எல்லா நிர்வாகிகளையும் எப்போது சந்தித்து, எப்போது எல்லாப் பெயர்களையெல்லாம் கேட்டுத் தெரிந்து எப்ப கட்சி ஆரம்பித்து என்ன செய்யப் போகிறார் என்பது பெரும் மலைப்பையே தருகிறது.

    தவிப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்

    தவிப்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்

    உண்மையில் ரஜினி ரசிகர்கள்தான் பரிதாபமாக காட்சி தருகிறார்கள். அரசியலுக்கே வர மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் அதிரடியாக வந்ததோடு, கட்சியையும் ஆரம்பித்து பல வேலைகளை புயல் வேகத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நாம் இத்தனை காலமாக காத்துக் கொண்டிருக்கிறோம். தலைவர் வர மாட்டேங்கிறாரே என்ற வேதனையில் அவர்கள் உள்ளனர். இந்த நிலையில்தான் ரஜினியின் புதிய பட அறிவிப்பு வந்துள்ளது.

    சட்டசபை அல்லது லோக்சபா தேர்தல்

    சட்டசபை அல்லது லோக்சபா தேர்தல்

    இப்போது ரஜினி இருக்கும் நிலையைப் பார்த்தால் சட்டசபை அல்லது லோக்சபா தேர்தலையொட்டித்தான் அவர் ஏதாவது அறிவிப்பார் என்று தெரிகிறது. எப்படியும் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாக குறைந்தது 6 மாதமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரைக்கும் அவர் நடித்துக் கொண்டிருப்பார் என்றும் தோன்றுகிறது.

    English summary
    Actor Rajinikanth has inked a new pact with Sun pictures for a new movie. This has created a mixed opinions on the Actor's speculated political entry. All wonder, if Rajinikanth is serious about politics at all.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X