For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 டன் ரேசன் அரிசி கடத்தல் - லாரி டிரைவர் அதிரடி கைது

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி டிரைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வன சுந்தர், எஸ்ஐ மாரி ஆகியோரது தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை அருகே இரவு வாகன சோதனை நடத்தினர்.

இதில் மறவன்மடம் விலக்கு அருகே வந்த ஒரு மினி லாரியை போலீசார் தடுத்து சோதனை போட்டனர். அப்போது அதில் சட்டவிரோதமாக ரேசன் அரிசி கடத்தப்படுவது தெரிய வந்தது. ரேசன் அரிசியை லாரியில் கடத்தி சென்ற தூததுக்குடி மாவட்டம் கோட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்த டிரைவர் சுடலை என்பவரது மகன் பெரியசாமியை கைது செய்தனர்.

மேலும் லாரியையும், அதனுள் 45 மூட்டைகளில் இருந்த 2250 ரேசன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முதல் கட்ட விசாரணையில் தூத்துக்குடியில் உள்ள ரேசன் கடைகளில் சேகரிக்கப்பட்ட அரிசியை தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்து அங்கிருந்து லாரியில கேரள கடத்தி சென்றது தெரிய வந்தது.

மேலும் லாரியில் இருநது தப்பி ஓடிய தாளமுத்து நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட சிலரை போலீசார் தீவிரமாக தேடி வருகினறனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

English summary
Lorry driver arrested for ration rice smuggling in Tuticorin. police arrested him and confiscated the rice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X