For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் விதிமுறை மீறல் நிரூபணமானால் ஒரு வருடம் சிறை, 6 வருடம் தேர்தலில் போட்டியிட தடை

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் விதிமுறை மீறல் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் 6 வருடங்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப் படும் எனவும். அதேபோல் உரிய ஆவணங்கள் இருந்தும் பணம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தப் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

EC warns officials on seizure of money

அப்போது அவர்கள் கூறியதாவது:-

54,976 புகார்கள்...

தேர்தல் விதிமுறை மீறி பேனர்கள் வைத்து தொடர்பாக இதுவரை 54 ஆயிரத்து 976 புகார்கள் வந்துள்ளன. இதில் 52 ஆயிரத்து 588 போடர்கள். பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

பறிமுதல்...

வாகன சோதனையில் 10 கோடியே 75 லட்சத்து 65 ஆயிரத்து 324 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அதில் தங்கம் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 10 லட்சத்து 42 ஆயிரம்.

பறக்கும் படை...

தமிழ்நாடு முழுவதும் 1410 தேர்தல் பறக்கும் படை யினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு எம்.பி. தொகுதிக்கும் 36 குழுக்கள் செயல்படு கின்றன.

நடவடிக்கை....

அதேசமயம் உரிய ஆவணங்கள் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப் பட்டால், அத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

விசாரணை....

கள்ளக்குறிச்சியில் போலீஸ் அதிகாரி ஒருவர் முதல்வர் ஜெயலலிதா படத்தை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ததாக புகார் வந்தது. அதுகுறித்து விசாரணை நடத்தும்படி போலீஸ் டி.ஜி.பி.க்கு மனு அனுப்பி உள்ளோம். அவர் விசாரித்து அறிக்கை அளிப்பார்.

விளக்கம்....

அமைச்சர் எம்.சி.சம்பத் பணம் வினியோகம் செய்ததாக புகார் வந்தது. இது பற்றியும் கலெக்டரின் விளக்கம் கேட்டுள்ளோம். ஓரிருநாளில் அறிக்கை கிடைக்கும்.

ஒரு வருடம் சிறை...

பொதுவாக தேர்தல் விதிமீறல், குற்ற நடவடிக்கை தொடர்பாக புகார்கள் பதிவு செய்யப் பட்டால் அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அவை முடிந்ததும் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். கோர்ட்டில் ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை தண்டனை கிடைக்கும். 6 வருடங்கள் தேர்தலில் போடியிட முடியாது.

அம்மா என்பது பொதுப்பெயர்....

தமிழ் நாட்டில் அம்மா பெயரில் திட்டங்கள் உள்ளன. அது பொதுப்பெயர் என்பதால் அதை மறைக்க வேண்டியதில்லை. ஆனால் முதலமைச்சர் படத்தை மறைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

நோட்டோவுக்கு தனிச்சின்னம்....

ஓட்டுப்பதிவு எந்திரத்தில் நோட்டோ வுக்கு தனி சின்னம் அமைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

10 வண்டிகள் மட்டுமே வரலாம்...

தேர்தல் பிரசாரத்தின் போது தலைவர்களின் வாகனத்துடன் 10 வண்டிகள் வரலாம். அதிகமான வாகனங்கள் வந்தால் 100 மீட்டர் இடைவெளி விட்டு வர வேண்டும்.

வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகு...

பெரிய தலைவர் களின் கூட்டங்களுக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து வருவது தொடரபாக தற்போது கணக்கெடுத்து வருகிறோம். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகுதான் இது வேட்பாளர் கணக்கில் சேரும்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Tamilnadu chief election officer Praveenkumar has warned the officials for seizing money from the public even if they have clear documents
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X