நிர்வாகிகள் கூட்டத்தில் குண்டு போட்ட தோப்பு வெங்கடாச்சலம்... அதிர்ச்சியில் ஈபிஎஸ் : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டத்துக்கு ஜெயலலிதா அறிவித்த, செயல்படுத்த நினைத்த திட்டங்களையெல்லாம், முதல்வர் எடப்பாடி எடப்பாடி பழனிச்சாமி கிடப்பில் போட்டுள்ளார் என தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ கூறியுள்ளது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுளது.

பெருந்துறையில் எல்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அப்போது பேசிய தோப்பு வெங்கடாச்சலம், முதல்வர் எடப்பாடி மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டத்துக்கு அறிவித்த திட்டங்களையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டார்.

 Edappadi Palanisamy does not implement any scheme in Erode

எய்ம்ஸ் மருத்துவமனை இங்கு வருவதாக இருந்தது. ஆனால் எடப்பாடியார் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அந்தத் திட்டத்துக்காக ஒரு பிடிமண் கூட எடுக்கப்படவில்லை.

மக்கள் நாம் நல்லது செய்வோம் என்ற நம்பிக்கையில்தான் ஓட்டளித்தார்கள். அந்த மக்களின் நம்பிக்கைக்கு நாம் என்ன செய்தோம்? கொங்குப் பகுதியைச் சேர்ந்தவர் முதல்வராக இருந்து அம்மக்களுக்கு என்ன செய்தார்? என மக்கள் கேள்வி கேட்டால் என்ன ஆகும்? என அவர் பேசியதைக் கேட்டு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TN Cm Edappadi Palanisamy does not implement any schemes, whatever Jayalalitha wanted to implement in Erode said Thoppu Venkatachlam MLA.
Please Wait while comments are loading...