இபிஎஸ் ஆட்சி தொடர்வதும், கவிழ்வதும் மோடி கையில் உள்ளது: திருமாவளவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்வதும், கவிழ்வதும் பிரதமர் மோடியின் கையில் உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

EPS govt's fate is in Modi's hand: Thirumavalavan

தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடர்வதும், கவிழ்வதும் பிரதமர் மோடியின் கையில் உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 25ம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டம் ஒரு அணியின் போராட்டம் என்று நினைக்காமல் பொது போராட்டமாக கருதி அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.

வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமையை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்துவோம்.

உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடுவது சட்டவிரோதமான செயல். நீட் தேர்வு குறித்து ஜனாதிபதியே ஒரு முடிவுக்கு வராமல் இருக்கும் போது மத்திய அமைச்சர் கருத்து தெரிவிப்பது சரி அல்ல.

இட ஒதுக்கீட்டு முறையை ஒழிக்க மத்திய அரசு மறைமுகமாக முயற்சி செய்து வருகிறது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
VCK chief Thirumavalavan said that EPS government's fate is in PM Modi's hand.
Please Wait while comments are loading...