For Daily Alerts
மீண்டும் அரைமணி நேரம் முடங்கிப் போன பேஸ்புக் – பரிதவித்துப் போன பதிவர்கள்

இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை முடக்கப்பட்ட பேஸ்புக்கால் பதிவர்கள் பெருமளவில் தவிப்படைந்தனர். இந்த எதிர்பாராத முடக்கத்திற்கு பேஸ்புக் சேவைக்கான சர்வரில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஆனாலும், "தடங்கலுக்கு வருந்துகின்றோம். கோளாறு விரைவில் சரி செய்யப்படும்" என்ற செய்தி மட்டுமே மீண்டும், மீண்டும் திரையில் தோன்றியது. செல்போன்களிலும் இந்த பிரச்சனை ஏற்பட்டது.
இதுதான் சாக்கென்று டுவிட்டரில் பேஸ்புக் எரர் என்ற செய்திகள் குவிந்தது.
அதன்பின், அரை மணி நேரத்தில் பேஸ்புக் வழக்கம்போல் இயக்கத் தொடங்கியது. இதுகுறித்த மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் பதிவர்கள் பலர் ஸ்டேட்டஸாகவே போடத் தொடங்கினர்.
இதற்கு முன்பாக கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதியன்று இது போன்ற கோளாறு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.