For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெஜ்ரிவால் மாதமாக மாறிய பிப்ரவரி 2015!

Google Oneindia Tamil News

சென்னை: பிப்ரவரி மாதத்திலும் மக்களுக்கு பல அதிர்ச்சிகளும், ஆச்சரியங்களும் காத்து இருந்தன.

டெல்லி சட்டசபைத் தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 3 இடத்தை மட்டும் பாஜகவுக்குக் கொடுத்து விட்டு மற்ற இடங்களில் கெஜ்ரிவால் கட்சியை ஜெயிக்க வைத்தனர் டெல்லி மக்கள்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரதரத்னாவும் இந்த மாதத்தில்தான் வழங்கப்பட்டது.

கவுடாவின் ஓய்வு

கவுடாவின் ஓய்வு

பிப்ரவரி 1ம் தேதி எனக்கு வயதாகி விட்டதால் இனிமேல் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என்று முன்னாள் பிரதமர் தேவெ கவுடா அறிவித்தார்.

கேபிக்குத் தடை போட்ட இலங்கை

கேபிக்குத் தடை போட்ட இலங்கை

பிப்ரவரி 5ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் தலைவர் குமரன் பத்மநாபன், வெளிநாடுகளுக்குச் செல்ல இலங்கை அரசு தடை விதித்தது.

ரஜினிக்குத் தடை

ரஜினிக்குத் தடை

நான்தான் ரஜினிகாந்த் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்திப் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 6ம் தேதி நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது.

ஆத் ஆத்மி வரலாறு

ஆத் ஆத்மி வரலாறு

பிப்ரவரி 10ம் தேதிடெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சி 67 இடங்களை தட்டிச் சென்று அனைவரையும் அதிர வைத்தது.

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல்

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 2000 பேர் பலியானதாக பிப்ரவரி 15ம் தேதி மத்திய அரசு அறிவித்தது

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல்

ஸ்ரீரங்கத்தில் நடந்த இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வளர்மதி மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிப்ரவரி 16ம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அவர் 96,516 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

லீவில் போன ராகுல் காந்தி

லீவில் போன ராகுல் காந்தி

தொடர் தேர்தல் தோல்விகளால் மனம் நொந்து போன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசியலுக்கு சில மாதங்கள் விடுமுறை போட்டுச் செல்வதாக பிப்ரவரி 22ம் தேதி காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ஆர்.சி. சக்தி மரணம்

ஆர்.சி. சக்தி மரணம்

திரைப்பட இயக்குநர் ஆர்.சி. சக்தி பிப்ரவரி 23ம் தேதி மரணமடைந்தார்.

English summary
2015, February saw the rise of Arvind Kejriwal in Delhi. His party won the assembly elections in style. Congress was decimated in the polls and BJP was cornered with just 3 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X