மோடி அரசின் மொத்த சாதனையையும் சொல்ல இந்த ஒரு படம் போதும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடி அரசின் மொத்த சாதனையையும் ஒரே படத்தில் சொல்ல வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள். இதோ இந்த படம்தான் அதற்கு சாட்சி என்கிறார் இந்த இயக்குநர்.

பாலிவுட் பட இயக்குநர் சிரிஷ் குண்டர் டிவிட்டரில் ஷேர் செய்துள்ள இந்த படம் வைரலாக சுற்றி வருகிறது. அந்த போட்டோவில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஏடிஎம் மையத்திற்குள், பசு மாடு சாணம் போட்டுவிட்டு படுத்துள்ளது.

Film maker Shirish Kunder tweet goes viral

டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் போனது. ஆட்சிக்கு வந்தது முதல் பசுவை பாதுகாப்பதாக கூறி, பாஜகவை சேர்ந்த உப, துணை அமைப்பினர் பல அட்டகாசங்கள் செய்தனர்.

ஸ்வச் பாரத் என்று கூறி நாட்டை தூய்மைப்படுத்துவதாக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்தனர். இவை ஒன்றோடொன்டு பிண்ணி பிணைந்து இந்த படத்தில் காணப்படுகிறது.

ஏடிஎம் மையத்தில் கூட சுத்தம் இல்லை, பசுவை பாதுகாக்க ஆளில்லாமல் ஏடிஎம்முக்குள் படுத்துள்ளது. நாட்டில் பணப்பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் வரத்து ஏடிஎம்களுக்கு இல்லை. இப்படி ஒரு கோணத்தையும் காட்டுகிறது இந்த படம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
"This happens only once in 1000 years. Digital India, Cow & Swachh Bharat have come together. Blessed" says, film maker Shirish Kunder.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற