ஓபிஎஸ்-க்கு மாஜி பாமக பொன்னுசாமி நேரில் ஆதரவு! சசி தரப்பின் பேரம் அம்பலம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முன்னாள் மத்திய அமைச்சரான பாமகவில் இருந்து அதிமுகவில் இணைந்த பொன்னுசாமி இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது சசிகலா தரப்பு தமக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தருவதாக பேரம் பேசியதாக அம்பலப்படுத்தினார்.

முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அணியில் அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் பலரும் இணைந்து வருகின்றனர். பாமகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமியும் இன்று முதல்வர் ஓபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Former Union Minister Ponnusamy meets OPS

அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடம் பேசிய பொன்னுசாமி, சசிகலா தரப்பு தம்மை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அனுப்புவதாக பேரம் பேசிய தகவலையும் வெளியிட்டார். இதேபோல் பல மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் தொடர்ந்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Union Minister Ponnusamy today met Chief Minister O Panneerselvam.
Please Wait while comments are loading...