நெல்லையில் கிளைடர் விமான கண்காட்சி.. காண மாணவர்கள் ஆர்வம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: மணிமுத்தாறில் நடைபெறும் கிளைடர் விமான கண்காட்சியை மாணவர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மணிமுத்தாறில் கிளைடர் விமான கண்காட்சி தொடங்கியுள்ளது. தென் மாவட்டங்களில் முதன் முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் பார்த்து வியந்து வருகின்றனர்.

Glider air exhibition started at Nellai

சொசைட்டி ஆப் ஏரோநாட்டிங்iகல் இன்ஜினியர்ஸ் ஆல் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் கிளைடர் விமானத்தை உருவாக்கும் முறை, பறக்கும் விதம் மற்றும் தரை இறங்குவது, கிளைடர் விமானம் இயக்க லைசென்ஸ் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இதுகுறித்து விமான பொறியாளர் சங்க தலைவர் பொன்கிஷன் கூறுகையில், கிளைடர் வி்மான பயிற்சி பெங்களுரு, புனே, சென்னையில் தான் இதுவரை நடத்தப்பட்டது.

தென் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பள்ளி பருவத்தில் இது போன்ற விமானத்தை வடிவமைத்து உருவாக்கும் ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என்பதன் விளைவாக இந்த விமான கண்காட்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மாணவர்கள் இந்த கண்காட்சியை ஆர்வத்துடன் பார்த்து குறிப்பெடுத்து செல்கின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Glider air exhibition started at Nellai. Students are looking at the glider Air Exhibition held at Manimutharu.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X