For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று 48வது “பொறியாளர் தினம்”- இந்தியாவின் முதல் பொறியாளர் விஸ்வேஸ்வரையா நினைவாக!

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாடத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டாலும், மாணவர்கள் சாரை சாரையாக படையெடுக்கும் துறை பொறியியல். அத்தகைய சிறப்பு பெற்ற பொறியாளர்களுக்கான 48வது "பொறியாளர்கள் தினம்" இன்று கொண்டாடப்படுகின்றது.

அப்படி பொறியாளர்கள் அனைவருக்கும் முதன்மைப் பொறியாளராக இருந்த ஒருவரின் பிறந்தநாளே இந்தியாவில் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பிறந்த மோக்சகுந்தம் விஸ்வேஸ்வரையா தான் அந்தப் பெருமைக்குரிய பொறியாளர்.

"சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர். புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார்.

இந்தியாவின் முதல் பொறியாளர்:

இந்தியாவின் முதல் பொறியாளர்:

இந்திய அரசு இவரை ஆப்பிரிக்காவின் ஈடன் நாட்டுக்கு நீர் மற்றும் கழிவு நீர் குறித்து படிப்பதற்கு அனுப்பியது. இந்தியாவின் முதல் மற்றும் முதன்மை பொறியாளர் இவர் தான்.

கிருஷ்ண ராஜ சாஹருக்கு அடிக்கல்:

கிருஷ்ண ராஜ சாஹருக்கு அடிக்கல்:

மைசூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாஹர் அணை கட்டும்போது தலைமைப் பொறியாளராக பணிபுரிந்தவர். இந்த அணை கட்டும்போது, ஆசியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக கருதப்பட்டது மட்டுமல்லாமல், பல தொழில்நுட்ப வல்லுனர்களால் பாரட்டப்பட்டது.

மைசூரின் தந்தை:

மைசூரின் தந்தை:

மைசூர் திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் "நவீன மைசூரின் தந்தை" எனவும் அழைக்கப்படுகிறார். சிறந்த பொறியாளராக திகழ்ந்த சர்.எம்.விக்கு 1955 ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய விருதான "பாரத் ரத்னா" விருது வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

நாட்டின் வளர்ச்சி உங்கள் கையில்:

நாட்டின் வளர்ச்சி உங்கள் கையில்:

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ள இந்தத் தினம், பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றுகிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட பொறியாளர்கள் அனைவருக்கும் இனிய பொறியாளர் தின வாழ்த்துகள்!

English summary
In India, the Engineer's day is celebrated every year on September 15 in remembrance of Sir Mokshagundam Visvesvaraya, the most outstanding Engineer of all times. He is popularly known as Sir MV; born on 15 September 1860 was a notable Indian engineer, thus it is celebrated on this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X