For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுமி ஹாசினியை கொன்ற தஷ்வந்துக்கு மரண தண்டனை - வழக்கு கடந்து வந்த பாதை

சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டு காலமாக நடந்தது என்ன என்று பார்க்கலாம்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஹாசினி கொலை வழக்கு..நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த்- வீடியோ

    சென்னை: சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து இன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு கடந்த ஓராண்டுகளாக கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

    • போரூர் அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு. அவரது மகள், ஹாசினி. கடந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஹாசினி மாயமானார்.
    Hasini Rape murder case timeline

    • அதே பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் 24 என்பவன் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றான். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தஷ்வந்தை காட்டிக்கொடுத்தது.
    • மாங்காடு போலீசாரால் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டான். தஷ்வந்துக்கு அவனது பெற்றோர் ஆதரவாக இருந்தனர்.
    • தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவருடைய தந்தை சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து கடந்த செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • ஜாமின் பெற்று வெளியே வந்த தஷ்வந்த் டிசம்பர் 2ஆம் தேதியன்றும் அப்பா வேலைக்கு போன உடன் அம்மா சரளாவிடம் தஷ்வந்த் பணம் கேட்டிருக்க வேண்டும். அதற்கு சரளா மறுக்கவே, தாயை கொன்று விட்டு வீட்டில் இருந்த 25 பவுன் நகை, பணத்தை எடுத்துக்கொண்டு தஷ்வந்த் தலைமறைவானான். இதனையடுத்து ஹாசினி கொலை வழக்கு வேகம் எடுத்தது.
    • தனிப்படை போலீசார் அவனை கைது செய்தனர். மும்பை விமான நிலையத்தில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பினான். அவனை, மீண்டும் போலீசார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
    • சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தஷ்வந்த் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட தஷ்வந்த் கடந்த டிசம்பர் 13ஆம் தேதியன்று செங்கப்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    • அப்போது அங்கு கூடியிருந்த பெண்களும் மகளிர் அமைப்பினரும் தஷ்வந்தை தாக்கினர். இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் தஷ்வந்தே வாதாடினான். தான் குற்றவாளி இல்லை என்பது தஷ்வந்த் தரப்பு வாதம்.
    • இந்த கொலை வழக்கில் கண்ணால் கண்ட சாட்சியங்கள் எதுவும் இல்லை என்றாலும் குற்றம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
    • தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோதே பெண்கள் அமைப்பினர், குழந்தைகள் நல ஆர்வலர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தஷ்வந்த் போன்றோர் வெளியில் இருப்பது சமூக பாதுகாப்புக்கு ஆபத்தானது என பலரும் கண்டனக் குரல்களை பதிவு செய்தனர்.
    • இரு தரப்பு வாதங்களும் கடந்த 14ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த ஓராண்டாக நடந்து வந்த இந்த கொலை வழக்கில் இன்று தீர்ப்பினை வாசித்த நீதிபதி வேல்முருகன், தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பளித்தார். தஷ்வந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
    • 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார். தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை தரவேண்டும் என்றும் பலரும் கூறி வந்த நிலையில் இன்று மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

    English summary
    Almost year ago, Hasini, a seven-year-old girl, was found brutally raped and murdered in Chennai. Twenty-three-year-old techie, S Daswant, was taken into custody in connection with the crime.The verdict in the double-murder case will be delivered on Monday, 19 February. Here are the time line of the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X