ஸப்பா என்னா வெயிலு.... சூட்டை தணிக்க என்ன செய்யலாம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வெயில் பல மாவட்டங்களில் சதத்தைத் தாண்டி வரும் நிலையில், வெப்பத்தினால் ஏற்படும்ட சூட்டை தவிர்க்கும் சில வழிகளை பார்க்கலாம்.

தற்போது நிலவி வரும் பருவ மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. இதனால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் ஆரோக்கியத்தை இழக்கின்றன.

Health tips to tackle the summer heat

இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் உபாதைகள் ஏற்படுகின்றன. இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை கூறியுள்ளனர்.

சித்தர்களின் மந்திரம்

நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். சூடு ஆறினதும் எண்ணையை இரு கால்களின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும். இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும். அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஐடி துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Siddha medicine helps to prevent from sunstroke
Please Wait while comments are loading...