For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வதந்திகள் எதிரொலி.. இனி வாட்ஸ் ஆப் பார்வேர்ட்களை எளிதாக கண்டுபிடிக்கலாம்.. வந்தது அப்டேட்

வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை உருவாக்க உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வதந்திகளை தடுக்க புதிய அப்டேட் கொண்டுவரும் வாட்ஸ் அப் நிறுவனம்- வீடியோ

    சென்னை: வாட்ஸ் ஆப் வதந்திகளை கட்டுப்படுத்த வாட்ஸ் ஆப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை உருவாக்க உள்ளது. பார்வேர்ட் மெசேஜ்களை கண்டுபிடிக்க இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    வாட்ஸ் ஆப் வதந்திகளை கண்டுபிடிக்க உதவினால் ரூ.30 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்று வாட்ஸ் ஆப் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.வாட்ஸ் ஆப் வதந்தி பிரச்சனை தற்போது இந்தியாவில் மிகவும் பெரிதாகி உள்ளது.

    இதற்கு முடிவு கட்ட தற்போது வாட்ஸ் ஆப் முடிவெடுத்துள்ளது. அதற்கான முதல் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது

    என்ன மாதிரியான பிரச்சனை

    என்ன மாதிரியான பிரச்சனை

    குழந்தைகளை ஒரு கும்பல் கடத்துகிறது, பாதுகாப்பாக இருங்கள் என்று வாட்ஸ் ஆப் பார்வேர்ட் ஒன்று கடந்த சில மாதங்களாக பரவுகிறது. மர்ம கும்பல் ஒன்று குழந்தைகளை கடத்தி விற்பதாக வெளியான இந்த வாட்ஸ் ஆப் வதந்தி காரணமாக கடந்த 5 மாதங்களில் மட்டும் 31 பேர் இந்தியா முழுக்க கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதை தடுக்க முடியாமல் அரசு திணறி வருகிறது.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த நிலையில் வாட்ஸ் ஆப் பொய்யான செய்திகளை, மெசேஜ்களை கண்டுபிடிக்க புதிய முறையை கடைபிடிக்க உள்ளது. வாட்ஸ் ஆப் வதந்திகளை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்க ரெடி என்று கூறியுள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தை இதற்காக உருவாக்க நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட இருக்கிறார்கள்.

    திட்டம்

    திட்டம்

    மேலும் அடுத்து வர இருக்கும் அப்டேட்டில் பார்வேர்ட் மெசேஜ்களை காட்டிக் கொடுக்கும் வசதி வர இருக்கிறது. நாம் ஏற்கனவே வந்த மெசேஜையோ, அனுப்பிய மெசேஜையோ பிறருக்கு மீண்டும் அனுப்பினால் அந்த மெசேஜின் மேல் பகுதியில் சிறியதாக பார்வேர்ட் மெசேஜ் என்ற லேபிள் இருக்கும்.கண்டிப்பாக நாம் பார்வேட் மெசேஜ் அனுப்பினால் பிறருக்கு காட்டிக் கொடுத்துவிடும்.

    பெரிய பயன்

    பெரிய பயன்

    இன்னும் சில நாளில் சாதாரண வாட்ஸ் ஆப்பில் இந்த வசதி வரும். பீட்டாவில் மிகவும் சரியாக இது செயல்படுகிறது. இதன் மூலம் அதிக பார்வேர்ட் மெசேஜ்கள் அனுப்பப்படுவது குறையும். அதேபோல் போலியான மெசேஜ்களை அதிகம் அனுப்புவது குறையும். வதந்தியை கட்டுப்படுத்த இது பயன்படும்.

    English summary
    Hereafter people can find Whats App forward easily to avoid Rumors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X