For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

40 ஆயிரம் பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் அம்பேல்.. ஒப்புக் கொண்ட ஒன்பிளஸ் மொபைல் நிறுவனம்!

40 ஆயிரம் பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    உஷார் மக்களே...உங்களுக்கு இது போன்று போன்கால்கள் வருகிறதா?- வீடியோ

    சென்னை: சமீபத்தில் வந்து வைரல் ஆன மொபைல்களில் ஒன்பிளஸ் மொபைல் நிறுவனமும் ஒன்று. இதில் இருக்கும் வசதிகள், தெளிவான கேமரா காரணமாக பலரும் இதை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

    தற்போது இந்த மொபைல் நிறுவனம் பெரிய சிக்கலை சந்தித்து இருக்கிறது. இதில் இருக்கும் வாடிக்கையாளர்கள் பலரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதற்கு ஒன்பிளஸ் முதலில் மறுப்பு தெரிவித்தது. தற்போது தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டது உண்மைதான் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

    என்ன ஆனது

    என்ன ஆனது

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆன் லைன் ஸ்டோரில் பலரும் மொபைல் உபகரணங்கள் வாங்குவார்கள். இவர்கள் அப்போது தங்களுடைய கிரெடிட் கார்ட் விவரங்களை அதில் கொடுப்பார்கள். இந்த விவரங்கள்தான் திருடப்பட்டு இருக்கிறது. நிறுவனத்திற்கும், மக்களுக்கும் தெரியாமல் இது நடந்துள்ளது.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இது எப்படி நடந்தது என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் எதோ ஒரு மென்பொருள் இதில் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மென்பொருள் மக்கள் கிரேட் கார்ட் தகவலை கொடுக்கும் போது அதை திருடி ஹேக்கர்களுக்கு அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    விளைவு என்ன

    விளைவு என்ன

    இதனால் 40 ஆயிரம் பேரின் கிரேடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து இப்படி திருடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரத்திற்கு முன்புதான் அந்த நிறுவனத்திற்கு இந்த விவரம் தெரிந்துள்ளது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதற்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டு இருக்கிறது. 40 ஆயிரம் பேருக்கும் தனித்தனியாக மெயில் அனுப்ப அந்த நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. அதேபோல் தற்காலிகமாக தங்கள் இணையத்தில் இணைய விற்பனையை நிறுத்தி இருக்கிறது.

    English summary
    Huge credit card data breach happened in Oneplus website. Nearly 40,000 customers were affected by the cyber attack. Oneplus has sent out an email to all possibly affected users
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X