For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்... மதுரை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா சபதம்

|

மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் தான் வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் என திருநங்கை பாரதி கண்ணம்மா தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மதுரை லோக்சபா தொக்குதில் திருநங்கை பாரதி கண்ணம்மா என்பவர் சுயேட்சையாக களமிறங்குகிறார்.

இந்நிலையில் தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பாரதிகண்ணம்மா சிறப்புப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

I will fight to eradicate alchohol: transgender bharathi

3ம் பாலினமாக அறிவிப்பு....

திருநங்கைகளை மனிதர் களாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பல ஆண்டுகளாக போராடி வந்தோம். அதன் பயனாகவே சுப்ரீம் கோர்ட்டு 3-ம் பாலினமாக எங்களை அறிவித்து உள்ளது.

சமுதாய அங்கீகாரம்...

இனிமேல் நாங்கள் குடும்ப உறுப்பினர் களாகவும், அனைத்து துறை களிலும் இடஒதுக்கீடு பெற வும், அரசியலில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளோம். சமுதாயத்தில் அங்கீகாரம் கிடை க்கும்.

அதிருப்தியில் மக்கள்...

பிரதான கட்சிகளின் மேல் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பல்வேறு அரசியல் வாதிகள் தேர்தலின்போது வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். ஆட்சிக்கு வந்தபின் கண்டுகொள்வதில்லை.

சமுதாய மாற்றம் வேண்டி....

நாட்டில் ஏழையாக பிறந்தவன், ஏழையாகவே இறக்கிறான். சமுதாய மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.

டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன்...

நான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகளை ஒழிக்க பாடுபடுவேன். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வர்கள் மீது நடவடிக்கை எடுப் பேன். ஏழைகளின் வாழ்வா தாரம் உயர பாடுபடுவேன். ஊழல் செய்பவர்களை தட்டிக் கேட்பேன்.

நல்ல வரவேற்பு...

கடந்த 10-ந் தேதி முதல் மதுரை மாவட்டம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். போகும் இடங்களில் எல்லாம் ஆண்களும், பெண்களும் நல்ல வர வேற்பு கொடுக்கின்றனர். குறிப்பாக பெண்கள் என்னை அரவணைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

மிக்க மகிழ்ச்சி...

அரசு ஊழியர்கள், போலீசார் சிலர் எனக்கு போன் செய்து, எங்களது ஓட்டுக்களை உங்களுக்கே பதிவு செய்து தபாலில் அனுப்பி உள்ளோம் என்று கூறினர். அதை கேட்ட நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

ஏமாற்றிய கட்சிகள்...

மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளுக்காக தீவிர பிரசாரம் செய்தேன். ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டனர். அதனா லேயே இந்த தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்தேன். எதிர்காலத்தில் பிரபல கட்சிகள் என்னை தேடி வருவதற்கு இந்த தேர்தல் முன்னோடியாக இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The Madurai constituency independent candidate transgender Bharathi said that she will fight against liquor, if she win.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X