அப்போ காஜல் அகர்வால்... இப்போ செருப்புக் கால்... ஸ்மார்ட் ரேஷன் கார்டு குளறுபடிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: ஸ்மார்ட் ரேஷன் கார்டில் பயனாளர் புகைப்படத்துக்கு பதில் செருப்பு அணிந்த கால் புகைப்படம் பதியப்பட்டதால் பரபரப்பு உண்டானது.

தர்மபுரி போசிநாயக்கம்பட்டியைச் சேர்ந்தவர் மகேஷ். அவருக்கு சிலநாட்களுக்கு முன்பு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

In Smart ration card confusions continuing

அதைப் பார்த்த மகேஷ் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானார். காரணம் மகேஷின் புகைப்படத்துக்குப் பதிலாக செருப்புக் காலுடன் கூடிய ஒரு புகைப்படம் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மகேஷ் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். சிலநாட்களுக்கு முன்பு, இதேபோல் சேலம் மாவட்டம் சரோஜா என்பவரது புகைப்படத்துக்கு பதிலாக நடிகை காஜல் அகர்வால் புகைப்படம் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டது.

In Smart ration card confusions continuing

அந்த ஸ்மார்ட் கார்ட் குளறுபடி ஊடகத்தில் பரபரப்பான செய்தியாக்கப்பட்ட பின்னர், அவருக்கு புதிய கார்டு மாற்றிக் கொடுக்கப்பட்டது.

ஸ்மார்ட் கார்டு பணி ஆண்டுக்கணக்கில் நடந்தும் இப்படியான கோளாறுகள் நடப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Smart ration card instead of passport size photo graph, a photo with leg was quite shocking.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற