ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி.. சுவர் ஏறி குதித்து ஓடியவரை பிடிக்க போலீஸ் தீவிரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.தீபா வீட்டுக்கு வந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி..வீடியோ

  சென்னை: தியாகராய நகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரி போலி என தெரிய வந்துள்ளது. போலீஸ் விசாரித்த போது அவர் சுவர் ஏறி குதித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலில் குதித்த அவர் எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா பேரவை என்ற பேரவையை தொடங்கினார்.

  தனது பேரவையில் பதவி கொடுப்பதாக கூறி பலரிடம் பலகோடி ரூபாய் பணம் மோசடி செய்ததாக தீபா மற்றும் அவரது டிரைவர் ராஜா மீது போலீஸில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

  காலையில் ஒரு அக்கப்போர்

  காலையில் ஒரு அக்கப்போர்

  இந்நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தீபாவின் வீட்டிற்கு தன்னை வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ் குமார் என கூறி ஒரு நபர் வந்தார். இதையடுத்து அங்கு மீடியாக்கள் குவிந்தன.

  நான் ஐடி அதிகாரி

  நான் ஐடி அதிகாரி

  கையில் ஆவணத்துடன் நின்றிருந்த அவர் கூடுதல் அதிகாரிகள் வந்தவுடன் சோதனை தொடங்கப்படும் என்றார். மேலும் காலை 10 மணிக்கு மேல் சோதனை நடத்தப்படும் என்றார்.

  அட டுபாக்கூராம்

  அட டுபாக்கூராம்

  அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட தீபாவின் வழக்கறிஞர் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து தீபாவின் வீட்டிற்கு வந்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.

  திடீரென ஓடினார்

  திடீரென ஓடினார்

  அப்போது போலீசாரின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவர் திடீரென சுவர் ஏறிகுதித்து தப்பியோடினார். இதையடுத்து போலீசாரும் சுவர் ஏறிகுதித்து அவரை பிடிக்க விரட்டிச்சென்றுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித்துறை அதிகாரி எனக்கூறி போலி அடையாள அடையை காட்டி நபர் ஒருவர் மோசடியில் ஈடுபட முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Income tax officials arrived to Deepa's house at T Nagar Chennai. Jayalalitha's brother's daughter is Deepa.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற