நெருப்பில் தகிக்கும் கதிராமங்கலம்.. மறுபக்கம் "ஜிஎஸ்டி தீபாவளி"யைக் கொண்டாடிய இந்தியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நள்ளிரவில் நடைபெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நிகழ்ச்சி அமைந்து விட்டது.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேசம் என்ற தாரக மந்திரத்துடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நேற்று நள்ளிரவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான அறிமுக விழா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக கூட்டணி கட்சி எம்பி-க்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடே எதிர்பார்ப்பு

நாடே எதிர்பார்ப்பு

கடந்த 1947-ஆம் ஆண்டு 14-ஆம் தேதி நள்ளிரவில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு சென்றனர். நள்ளிரவில் இந்தியா சுதந்திரமடைந்தது. இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டின.

ஜிஎஸ்டியும்...

ஜிஎஸ்டியும்...

அதேபோல் மத்திய அரசு ஜிஎஸ்டி என்ற மாபெரும் வரி சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதை ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவு முதல் அமல்படுத்தியது.

சுதந்திர தின விழா போல

சுதந்திர தின விழா போல

இதுவும் நள்ளிரவில் அமல்படுத்தப்பட்டதால் இன்னொரு சுதந்திர தின விழா போல மாறி விட்டது. நாடாளுமன்றத்தில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது போல ஜிஎஸ்டி அறிமுகமும் அதே நாடாளுமன்றத்தில் நடந்தேறியது.

தீபாவளி

தீபாவளி

மறுபக்கம் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு முன்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் தீபாவளிக் கூட்டம் போல பல ஊர்களில் நிலவரம் காணப்பட்டது.

அதேசமயம், கதிராமங்கலத்தில் தொடர்ந்து எரிவாயுக் கசிவுப் பகுதியில் தீ எரிந்து கொண்டுதான் இருந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
GST implemented from yesterday midnight. It will enter into history like india independence.
Please Wait while comments are loading...