பாபா முத்திரை.. வளைந்த பாம்பு.. ரஜினி வெப்சைட்டில் இத்தனை சிறப்பம்சங்களா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியல்வாதி ரஜினியின் கொள்கை என்ன?-மக்கள் கேள்வி- வீடியோ

  சென்னை: ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டார். டிசம்பர் 31ல் வந்த அவரின் அறிவிப்பை மூன்று நாட்கள் ஆகியும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

  மேலும் சட்ட மன்ற தேர்தலில் அவர் போட்டியிட போவதாக கூறியுள்ளதால் ரசிகர்கள் இன்னும் உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இவரது அரசியல் அறிவிப்பு மக்களை கவர்ந்து இருக்கிறது.

  இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் இவர் தன்னுடைய இணையதள பக்கத்தை திறந்து இருக்கிறார்.

  ரஜினியின் இணையதளம்

  ரஜினியின் இணையதளம்

  நேற்று ரஜினியின் 'www.rajinimandram.org' என்படும் 'ரஜினி மந்திரம்' இணையதளம் குறித்த அறிவிப்பு வெளியான உடனே பலரும் அந்த இணைய பக்கத்தை சென்று பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்திய காரணத்தால் நேற்று மாலை சில நிமிடம் அந்த இணையத்தளம் வேலை செய்யாமல் போய் இருக்கிறது. ஆனால் உடனடியாக சரி ஆகி உள்ளது.

  பாபா முத்திரை

  பாபா முத்திரை

  இந்த இணையதள லோகோவில் இருக்கும் பாபா முத்திரைதான் பெரும்பாலும் ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் முத்திரையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் அரசியல் அறிவிப்பை வெளியிட்டவுடன் பாபா முத்திரையை ரசிகர்களிடம் காட்டினார். அதன் காரணமாகவே டிவிட்டர், பிளே ஸ்டார், இணையதளம் என அனைத்து இடத்திலும் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.

  பாம்பு எதற்கு

  பாம்பு எதற்கு

  இந்த லோகோவில் பாபா முத்திரையை சுற்றி ஒரு பாம்பு இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ராமகிருஷ்ண மடத்தின் லோகோவிலும் இதேபோல் வட்டமாக பாம்பு சுற்றி இருப்பது போன்ற சின்னம் இருக்கும். ரஜினி இந்த மடத்தில் படித்தவர் என்பதால் அதன் நினைவாக இந்த லோகோவை வடிவமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ராமகிருஷ்ண மடத்தின் லோகோ சுவாமி விவேகானந்தரால் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆப் திணறியது

  ஆப் திணறியது

  ரஜினி தனது அரசியல் செயல்பாட்டிற்காக வெளியிட்டு இருக்கும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனும் நேற்று வைரல் ஆனது. ஆனால் பலரும் இதில் சரியாக உறுப்பினர் பதிவு செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளனர். அதேபோல் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் (@officialairrm) எனப்படும் டிவிட்டர் ஐடியும் நேற்று வைரல் ஆனது. இதுவரை 9,222 பேர் இந்த ஐடியை பாலோ செய்து இருக்கிறார்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajini's new website ''www.rajinimandram.org'' has lot of important things. The logo has derived from the 'Ramakrishna Math' logo. The baba symbol may be his new party symbol.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற