பிரதமரின் பயண விவரத்தில் இடம்பிடித்த உணவு நேரத்தால் சர்ச்சை... அது போனவாரம் போட்ட பிளான்பா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சென்னை வந்தார் மோடி!- வீடியோ

  சென்னை : எதிர்க்கட்சிகளை கண்டித்து பாஜக அறிவித்துள்ள உண்ணாவிரதத்தில் பிரதமர் தன்னுடைய அலுவல்களைத் தொடர்ந்து கொண்டே உண்ணாவிரதம் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பிரதமரின் உத்தேச பயண விவரத்தில் உணவு நேரமும் இடம்பெற்றுள்ளதால் அவர் உண்ணாவிரதம் இருக்க மாட்டார் என்று செய்திகள் பரப்பப்படுகின்றன, இது போன வாரம் வெளியான பயண விவரம் என்று சிலர் விளக்கம் அளித்துள்ளனர்.

  நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் வீணடித்ததைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜக எம்.பி.க்கள் இன்று உண்ணாவிரதம் இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடகாவில் தனது வழக்கமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதே போன்று பிரதமர் நரேந்திர மோடியும் வழக்கமான தனது அலுவல்களை தொடர்ந்தபடியே உண்ணாவிரதம் இருப்பார் என கூறப்பட்டிருக்கிறது. உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டதால் மோடியின் சென்னை வருகை ரத்தாகுமா? என்கிற கேள்வி எழுந்தது. மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு குளறுபடிகளுக்கும் வாய்ப்பு இருப்பதால் பயணம் ரத்தாகலாம் என்று கூறப்பட்டது.

  பிரதமர் உண்ணாவிரதம் தொடர்வார்

  பிரதமர் உண்ணாவிரதம் தொடர்வார்

  ஆனால் தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிரதமரின் பயணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கமான அலுவல்களுடன் பிரதமர் உண்ணாவிரதம் மேற்கொள்வார் என கூறப்பட்டிருப்பதால், அவரது சென்னை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்தனர்.

  பிரதமரின் பயண விவரம்

  பிரதமரின் பயண விவரம்

  இந்நிலையில் பிரதமர் டெல்லியில் தனது பயணத்தை தொடங்குவது முதல் திரும்பவும் டெல்லி சென்றடைவது வரையிலான பயண விவரங்கள் நேற்று வெளியாகின. இதில் பிரதமர் காலை 6.40 மணிக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.20 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  உணவு நேரமும் இடம்பெற்றதால்

  உணவு நேரமும் இடம்பெற்றதால்

  இது வழக்கமான பயண விவரமாக இருந்தாலும் இந்த இடைப்பட்ட 2.30 மணி நேர விமான பயணத்தின் போதே பிரதமர் தனது காலை உணவை விமானத்திலேயே மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 2.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு 5.10 மணிக்கு சென்றடைவார். இந்த இடைப்பட்ட கால இடைவெளியில் விமானத்திலேயே மதிய உணவை சாப்பிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அர்த்தமற்றது

  இதனால் பிரதமர் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடத்தப்படும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க மாட்டார் என்று சமூகவலைதளங்களில் வேகமாக வதந்திகள் பரவின. ஆனால் இந்த பயண விவரம் ஏப்ரல் 6ம் தேதி போடப்பட்டது கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாஜக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தது. இந்நிலையில் பழைய பயணப் பட்டியலை வைத்துக் கொண்டு பிரதமர் உண்ணாவிரதம் மேற்கொள்ள மாட்டார் என்று சொல்வது அர்த்தமற்றது என்று கூறுகின்றன பாஜக வட்டாரங்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The schedule of PM Narendra Modi's chennai visit turns into debate that whether he continue his day long fast or not but the released schedule is a week later issued one so PM will continue his fasting told BJP sources.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற