For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்திற்கு மனநிலை பாதிப்பு?- தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்தின் செயல்பாடுகள் அவர் நல்ல மனநிலையில் தான் உள்ளாரா என்பதை சந்தேகிக்க வைத்துள்ளது என தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நேற்று தேமுதிக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. அதற்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் ஒருவர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், செய்தியாளர்களை நோக்கி காரித் துப்பி, தரக்குறைவாக பேசினார்.

இது தொடர்பான வீடியோ ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. விஜயகாந்தின் இந்த செயலுக்கு பத்திரிகையாளர்கள் மத்தியில் எதிர்ப்பும், கண்டனமும் வலுத்து வருகின்றன.

மனநிலை பாதிப்பு?

மனநிலை பாதிப்பு?

இந்நிலையில், விஜயகாந்தின் இந்த நடவடிக்கை குறித்து தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "விஜயகாந்தின் செயல்பாடுகள், அவர் நல்ல மன நிலையில் தான் உள்ளாரா என, சந்தேகிக்க வைத்துள்ளது. எனவே, நல்ல மன நல நிபுணரை வைத்து, அவர் மன நிலையை சோதிக்க வேண்டும்.

மிருககுணம்...

மிருககுணம்...

விஜயகாந்த், மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம், அவர் தன் வீட்டில் மிருகங்களை தான் வளர்க்கிறார். அதனால், அவருக்கு அந்த குணம் ஏற்பட்டு விட்டது என நினைக்கிறேன்.

அம்பலப் படுத்துவேன்...

அம்பலப் படுத்துவேன்...

ஊரையெல்லாம் திருடன் என பேசும் விஜயகாந்தின் ஒவ்வொரு நடத்தையும் எனக்குத் தெரியும். அவர் தொடர்ந்து இதே போல பேசிக் கொண்டிருந்தால், அவரின் கடந்த கால செயல்பாடுகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் விமர்சிக்க வேண்டியிருக்கும்.

பெரும் பாவம்...

பெரும் பாவம்...

இப்படிப்பட்ட மனிதரை, அரசியல் ரீதியில் வளர்த்து விட்ட பாவத்தை, எந்த காரியம் செய்து துடைப்பது என தேடிக் கொண்டிருக்கிறேன்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் சாடிய விஜயகாந்த்...

செய்தியாளர்களை கடுமையாக சாடிய விஜயகாந்த்...2016-ல் அதிமுக ஆட்சியை பிடிக்காது: விஜயகாந்த் பேட்டி...http://bit.ly/1mcrPoq

Posted by PuthiyaThalaimurai TV on Sunday, December 27, 2015

English summary
The DMDK MLA Sundarrajan has said that Vijayakanth has to consult a doctor to check his mental illness.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X