காவிரி போராட்டத்தில் குதிக்கிறார் தீபா.. நாளை ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஈரோட்டில் நாளை ஜெ.தீபா கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளார்.

காவிரி வாரியம் அமைக்கக் கோரி நாள்தோறும் தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் தீபா பேரவை சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தீபா குறிப்பிட்டுள்ளார்.

J.Deepas peravai going to do protest on tomorrow for Cauvery

அவர் பதிவில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து "கண்டன ஆர்ப்பாட்டம்" ஈரோடு ரயில் நிலையம் அருகில் நாளை காலை 11.00 மணி அளவில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

காவிரிக்காக தமிழகத்தில் போராட்டங்கள் வலுக்க தொடங்கின. மேலும் நாளை பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கும் அந்த போராட்டங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J.Deepa going to protest for Cauvery on tomorrow in Erode Railway Station. She starts her protest from Periyar's home soil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற