For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவா முதல் கத்தார் வரை.. உலகமெங்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் இப்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: உலகம் முழுக்க ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, அமீரகம் என பல கண்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் இப்போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டங்கள், தமிழகத்தில் போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இதுகுறித்த ஒரு சோஷியல் மீடியா புகைப்பட, வீடியோ டிவிட்டுகளை பாருங்கள்.

பானாஜியில் போராட்டம்

கோவா மாநில தலைநகர் பானாஜியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய ஆதரவாளர்கள், நாட்டு இன மாடுகளின் நன்மைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

கத்தாரில் சீறிய காளைகள்

கத்தார் நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் காளை படம் பொறித்த பதாகைகளுடன் காணப்பட்டனர்.

மெரினா மின்மினிகள்

மின்மினி பூச்சிகளாக மாறிய போராட்டக்காரர்கள் என்று மெரினா போராட்டக்காரர்களை கூறலாம். மின்சாரத்தை அரசு கட் செய்தபோது கூட செல்போன்களில் அவர்கள் வெளிச்சம் போட்டு ஆரவாரம் எழுப்பிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.

பெரியார் இயக்கம்

திராவிட இயக்கம் மற்றும் பெரியார் கற்றுக்கொடுத்த அறவழி போராட்டத்தின் நீட்சியே தற்போது நடைபெறும் தமிழர்கள் போராட்டம் என்கிறது இந்த டிவிட்.

English summary
Jallikattu protests going on across the world, here are the photos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X