For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகமாக திகழ்ந்தவர் அப்துல்கலாம்... ஜெ. புகழஞ்சலி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இந்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகமாக திகழ்ந்தவர் அப்துல்கலாம் என்று தமது இரங்கல் செய்தியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவால் நாடே பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

Jayalalithaa expresses condolence over Kalam's death

இந்திய விஞ்ஞானிகளுக்கு உத்வேகமாக திகழ்ந்தவர் அப்துல்கலாம். ஏழ்மையில் பிறந்து கடின உழைப்பால் முன்னேறியவர்.,

தமிழம் மக்களின் எண்ணங்களில் மண்ணின் மைந்தராக வாழ்ந்தவர். சுதந்திர இந்தியாவின் குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஒருவர்.

தம்முடைய கடின உழைப்பு, அறிவால் வியத்தகு இடத்தை எட்டியவர் அப்துல்கலாம். இந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தி திட்டங்களில் மிகப் பெரிய பங்கு வகித்தவர்.

அணுசக்தி ஆற்றலில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு மிக முக்கிய காரனமாக இருந்தவர் அப்துல்கலாம். அவரது iஇழப்புக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Tamilnadu Chief Minister Jayalalithaa on Monday expressed his condolences over the demise of former President A.P.J Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X