இந்தியன்- 2வுடன் நடிப்புக்கு முழுக்கு... இனி முழு நேர அரசியலில் இறங்க போகிறாராம் ஆண்டவர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சொந்த ஊரில் அதிரடியாக அரசியல் களம் இறங்கும் கமல்

  சென்னை: இந்தியன் 2 படத்துக்கு பிறகு இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் பொது வாழ்க்கையில் முழு நேரமும் ஈடுபடவுள்ளேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

  கடந்த சில மாதங்களாக தமிழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கமல் முன்வைத்துள்ளார். தற்போது அவர் வரும் 21-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

  Kamal Hassan hereafter fully involve in politics

  கட்சியை தொடங்க உறுப்பினர்களின் கையெழுத்து பெற்ற பிரமாண பத்திரத்தை கடந்த 12-ஆம் தேதி கமல் ரசிகர் மன்றத்தினர் டெல்லி தேர்தல் ஆணையத்தில் அளித்தனர். அண்மையில் அமெரிக்காவில் உள்ள தமிழர்களை கமல் சந்தித்து பேசினார்.

  அவரிடம் சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு தீவிர அரசியலில் இறங்கும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றார் கமல். விஸ்வரூபம் -2, சபாஷ் நாயுடு படங்களில் கமல் நடித்து வருகிறார். விஸ்வரூபம் -2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.

  சபாஷ் நாயுடு படமும் ஓரளவு முடிந்துவிட்டது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இனிமேல் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் எனத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதை அவரின் ரசிகர்கள் ஆதரித்தாலும், சினிமாவில் அவர் நடிக்க மாட்டார் என்ற செய்தி ரசிகர்களுக்கு வேதனையை தந்துள்ளது.

  இந்நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வழக்கறிஞர்கள், நற்பணி இயக்க முக்கிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார்.
  பயண திட்டம், கட்சி பெயர் அறிவிப்பு குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Kamalhassan discusses with his fanc club members regarding political party to be registered in EC. He says that he will indulge in politics for full time.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற