For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிரோடு இருப்பவர் இறந்ததாக போலி கையெழுத்து...."தாது மணல்" வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தாது மணல் தொழிலதிபர் வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக தாது மணலை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு கடத்துகிறார் என்பது வைகுண்டராஜன் மீதான புகார். அண்மையில் அவரது சகோதரர் குமரேசனும் இதே குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

தாது மண்டல் கடத்தல்

தாது மண்டல் கடத்தல்

மேலும், சட்ட விரோதமாக கடத்திய மணல் எந்தெந்த நாடுகளுக்கு எந்தெந்த நிறுவனங்களுக்கு சென்றது என்ற விவரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். அரசுக்கு 10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ரவுடிகளின் துணையுடன் தாது மணல் கடத்தப்பட்டிருக்கிறது. தாது மணல் கடத்தல் விவரங்களை நீதிமன்றத்திடம் தர தயாராக உள்ளேன் என்றும் குமரேசன் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

அதேபோல் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவை வைகுண்டராஜன் இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதனை வைகுண்டராஜன் தமது தொலைக்காட்சியான நியூஸ் 7 சேனலுக்கு அளித்த பேடிட்யில் மறுத்திருந்தார்.

நில அபகரிப்பு புகார்

நில அபகரிப்பு புகார்

தற்போது வைகுண்டராஜன் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட எஸ்.பி. விக்ரமனிடம் சுந்தரம் என்பவர் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

போலி கையெழுத்து

போலி கையெழுத்து

அதில், நெல்லை மாவட்டம் நவ்வலடி கிராமத்தில் வி.வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உயிரோடு இருக்கும் தாம் இறந்ததாக கூறி போலி கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்துவிட்டார் வைகுண்டராஜன் என கூறியுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களும் வைகுண்டராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

அதில், நெல்லை மாவட்டம் நவ்வலடி கிராமத்தில் வி.வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் உயிரோடு இருக்கும் தாம் இறந்ததாக கூறி போலி கையெழுத்து போட்டு நிலத்தை அபகரித்துவிட்டார் வைகுண்டராஜன் என கூறியுள்ளார். இதேபோல் அடுத்தடுத்து நில அபகரிப்பு புகார்களும் வைகுண்டராஜனுக்கு எதிராக கொடுக்கப்பட உள்ளதாம். இதனால் வைகுண்டராஜன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

English summary
A land grabbing complaint was today lodged against VV Minerals Industrialist Vaikundarajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X