For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஐபிகளுக்காக 10 நிமிடம் மட்டுமே போக்குவரத்தை நிறுத்தலாம்!... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்களுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்களுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2017ம் ஆண்டு அவசரமாக மருத்துவமனை செல்லும் போது தனது வாகனம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டதாக வழக்கறிஞர் துரைசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திர பானர்ஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

Madras HC ordered to transport police that not to block the traffic for more than 10 minutes

அப்போது மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்களுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்த வேண்டாம் என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதிக நேரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மருத்துவமனை செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் பாதுகாப்பு பணியின் போது இந்த விதிகள் பொருந்தாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

English summary
Madras HC ordered to transport police that not to block the traffic for more than 10 minutes if governor, chief justice and Chief minister passing the way.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X