ஜாமீன் வேணுமா? சீமை கருவேல மரங்களை வெட்டுங்க - அரியலூர் நீதிபதியின் புது உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

அரியலூர் : ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று அரியலூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளவர்களுக்கு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்க புதிய வகையான நிபந்தனையை விதித்துள்ளது அதன்படி ஜாமீனில் வெளிவரும் குற்றம் சாட்டப்பட்டவர் 20 நாட்களுக்குள் 100 சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதே!

Magistrate ordered, Accused who came out on bail should remove Seemai Karuvelam trees

ஜாமீனில் செல்பவர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றியதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட நீதிமன்றம் புதிய நிபந்தனையை விதித்திப்பட்டுள்ளது.

இந்த புதுவகையான நிபந்தனையை அரியலூர் மாவட்ட நீதிபதி ஏ.கே.ஏ ரஹ்மான் பிறப்பித்தார். அரியலூர் நீதிமன்றத்தின் இந்த புதிய உத்தரவை பல தரப்பினர் வரவேற்றுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Magistrate ordered, Accused who came out on bail should remove atleast 100 Karuvelam trees within 20 days.
Please Wait while comments are loading...