For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகாமக தீர்த்தப் பிரசாதம் வேணுமா? ஆன் லைனில் ரிசர்வ் பண்ணுங்க!!

Google Oneindia Tamil News

கும்பகோணம்: கும்பகோணம் மகாமக விழாவில், கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் அஞ்சல் மூலம் பிரசாதம் பெறலாம். இதற்காக, மாவட்டங்களில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் அலுவலகங்களிலும், சிறப்பு நிலை, முதல்நிலை, இரண்டாம் நிலை கோவில் அலுவலகங்களிலும், 150 ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு, மார்ச் 3ம் தேதிக்குள், மகாமக திருவிழா பிரசாதம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா தீர்த்தப் பிரசாதத்தை நேரடியாகவும், அஞ்சல் மூலமாக வும் பெற்றுக்கொள்ள அறநிலையத் துறை சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த தீர்த்த பிரசாதத்துக்கான பையில் மகாமக தீர்த்தம், கும்பகோணத்தில் உள்ள மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 வைணவ கோயில்களின் விபூதி, குங்குமப் பிரசாதங்கள், கற்கண்டு மற்றும் கும்பகோணம் கோயில்களின் வரலாறு புத்தகம் ஆகியவை இருக்கும். இந்த தீர்த்தப் பிரசாதத்தை கும்பகோணத்தில் உள்ள கோயில்களில் ரூ.100 செலுத்தி பிப்ரவரி 14ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

42 முக்கிய கோவில்களில் முன்பதிவு

42 முக்கிய கோவில்களில் முன்பதிவு

இதுதவிர தமிழகத்தில் உள்ள 42 முக்கிய கோயில்களில் அஞ்சல் மூலம் பெறுவதற்கு ரூ.150 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை பிப்ரவரி 16 முதல் முன்பதிவு செய்தவர்களின் முகவரிக்கு அஞ்சலகம் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைனில் முன்பதிவு

ஆன்லைனில் முன்பதிவு

http://mahamaham2016.in/holywater_registration.aspx

மேலும், நாடு முழுவதும் அனைத்து அஞ்சல் அலுவலகங்களி லும் தீர்த்தப்பிரசாதம் பெற பிப்ரவரி 5 முதல் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மகாமகப் பெரு விழாவுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள www.mahamaham2016.in என்ற இணைய தளத்திலும் தீர்த்தப் பிரசாதத்துக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கென ஏறத்தாழ ஒரு லட்சம் தீர்த்தப் பிரசாத பைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாம்.

முன் பதிவு செய்யப்படும் கோயில்கள் விவரம்

முன் பதிவு செய்யப்படும் கோயில்கள் விவரம்

தஞ்சாவூர் பெருவுடையார் கோயில், ஆலங்குடி குருபகவான் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில், திருச்செந்தூர், திருத்தணி, மருதமலை, திருவேற்காடு, திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்கள், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், பன்னாரியம்மன் கோயில்,

சென்னையில் கோயில்கள் முன்பதிவு செய்யுமிடங்கள்

சென்னையில் கோயில்கள் முன்பதிவு செய்யுமிடங்கள்

சென்னை கபாலீஸ்வரர் கோயில், மயிலாப்பூர் மாதவபெருமாள் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சென்னை வடபழனி ஆண்டவர் கோயில், சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில்களில் முன்பதிவு செய்யலாம்.

திருச்சி, சேலத்தில்

திருச்சி, சேலத்தில்

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் சேலம் சுகவனேஸ் வரர் கோயில், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில், பவானி சங்க மேஸ்வரர் கோயில், படைவீடு ரேணு காம்பாள் கோயில்களில் முன்பதிவு செய்யலாம்.

குற்றாலத்திலும் முன்பதிவு

குற்றாலத்திலும் முன்பதிவு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில், தஞ்சாவூர் புன்னைநல் லூர் மாரியம்மன் கோயில், திருக் குற்றாலம் குற்றாலநாதர் கோயில், திருவண்ணாமலை அருணாச் சலேஸ்வரர் கோயில், உறையூர் வெக்காளியம்மன் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில், வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில், சிக்கல் நவநீதேஸ் வரர் கோயில், திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில், கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோயில், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில், திங்களூர் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தீர்த்தப் பிரசாதத்துக்கு முன்பதிவு செய்ய லாம்.

நேரடியாக பெற ஏற்பாடு

நேரடியாக பெற ஏற்பாடு

மதுரை மீனாட்சியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், கோவை கோணி யம்மன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களிலும், கும்பகோணத்தில் உள்ள கோயில்களிலும் தீர்த்தப் பிரசாதத்தை பிப்ரவரி 16ம் தேதி முதல் நேரடியாக பெற்றுக் கொள்ளவும் அறநிலையத் துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும், விவரங்களுக்கு www.mahamaham2016.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

English summary
The Department of Posts has entered into an agreement with the Hindu Religious and Charitable Endowment Board, Tamil Nadu Government, for distributing `theertham' and `prasadam' by post for Mahamaham.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X