இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலான விஷயம்: அருண் ஜெட்லி பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி குறித்த கருத்தரங்கு சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ' இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலான விஷயம்' என்று கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "நாடு குறித்த பொறுப்பு அனைவருக்கும் வர வேண்டும். வருவாயை அதிகரிக்கவே மாநில அரசுகள் வரி விதித்துள்ளன. 17 வரிகளுக்குப் பதில் ஒரே வரியாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளது.

'Making Uniformal india is a challenging task' says Arun Jaitley

சேவை வரியை மத்திய அரசு விதித்தது. விற்பனை வரியை மாநில அரசு நிர்ணயித்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வரியிருந்தது. இந்தியாவில் வரிகட்டாத போக்கு அதிகரித்துவிட்டது. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை ஒருமுகப்படுத்துவது சவாலான விஷயம்." என்று குறிப்பிட்டார்.

இதனிடையே, கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தற்போது வரை புதிதாக ஜிஎஸ்டியின் கீழ்ப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக , மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஷ்முக் அதியா தெரிவித்துள்ளார்.

இதுவரை 12 லட்சம் விண்ணப்பங்கள் ஜிஎஸ்டி பதிவுக்காக வந்துள்ளன. அவை அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் 10 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் விண்ணப்பங்களை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர் என்றும் ஹஷ்முக் அதியா குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Finance Minister Arun Jaitley said , Making Uniformal india is a challenging task as multiple diversity nation.
Please Wait while comments are loading...