நீட் தேர்வுக்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்.. மோடி கொடும்பாவி எரிப்பு.. கைது.. பதற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உட்பட மதிமுகவினர் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மதிமுகவினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

MDMK protest against NEET exam in Chennai

அப்போது பிரதமர் மோடியின் கொடும்பாவியை அவர்கள் எரித்தனர். இதனை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து வைகோ உட்பட மதிமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK general secretery Vaiko and his party workers protest against NEET exam in Chennai. They burnt Prime minister Modi's Effigy. They all have been arrested.
Please Wait while comments are loading...