தேர்தல் அரசியலை கைவிட்டு விட்டு தி.க. பாணி இயக்கமாக மாறுகிறது மதிமுக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீவிர அரசியலில் இருந்து வைகோ மட்டுமல்ல அவர் சார்ந்த மதிமுகவும் விடைபெறுகிறது. திராவிடர் கழக பாணியில் தேர்தல் அரசியலுக்குப் போகாத சமூக சீர்திருத்த இயக்கமாகிறது மதிமுக.

திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அக்கட்சி நிர்வாகிகள் பெருமளவில் வெளியேறினர். எம்ஜிஆருடன் தொண்டர்கள்தான் வெளியேறினர். ஆனால் வைகோவுடன் கணிசமான நிர்வாகிகளும் கை கோர்த்தனர்.

தீக்குளித்தவர்கள்...

தீக்குளித்தவர்கள்...

தமிழக அரசியலில் வைகோவுக்காக மட்டுமே தீக்குளித்த தொண்டர்கள் ஏராளம்... இடிமழை உதயம், நொச்சிப்பட்டி தண்டபாணி என எண்ணற்றோர் தங்களையே வைகோவுக்காக தீக்கிரையாகினர்.

கரைசேரலையே...

கரைசேரலையே...

ஆனால் வைகோ கைவிட மறுத்த தன்முனைப்பு கால்நூற்றாண்டுக்குப் பின்னரும் கூட அந்த கட்சியை கரைசேர்க்க முடியாத ஒன்றாகிப் போனது. அன்று வைகோவுடன் வந்தவர்களில் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒன்றிரண்டு பேர்தான் இப்போது இருக்கிறார்கள்...

அசிங்கப்பட்டு நிற்கிறது...

அசிங்கப்பட்டு நிற்கிறது...

மதிமுக என்ற கட்சி, தமிழகத்தில் 'தரகு' வேலை பார்க்கிற கட்சியாக அசிங்கப்பட்டு நிற்கிறது. திமுக, அதிமுக, பாஜக, கடைசியாக மக்கள் நலக் கூட்டணியோடு கை கோர்த்துப் பார்த்தார் வைகோ. எந்த ஒரு கூட்டணி முயற்சியும் கை கொடுக்கவே இல்லை. தமிழக அரசியலில் ஒரு தோல்வி மனிதராகிப் போனார் வைகோ.

வைகோ ஓய்வு

வைகோ ஓய்வு

இதனால்தான் இனியும் அரசியலில் தேறவே முடியாத என்ற நிலையில் தீவிர அரசியலில் இருந்து வைகோ ஒதுங்க முடிவு செய்துவிட்டார். அவர் மட்டுமல்ல மதிமுகவையே அரசியல் கட்சியாக இனி நடத்தாமல் திராவிடர் கழகம் பாணியிலான ஒரு சமூக சீர்திருத்த இயக்கமாக மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார் வைகோ என கூறப்படுகிறது.

சீர்திருத்த இயக்கம்

சீர்திருத்த இயக்கம்

இது தொடர்பாக மதிமுகவின் மூத்த தலைவர்கள் படுதீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக கூடும் என கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Source said that MDMK politcal party will turn to social reforms movemnet.
Please Wait while comments are loading...