மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்வு... மகிழ்ச்சியில் விவசாயிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலை அடைந்தனர்.

Mettur Dam's water level increases

தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,880 கனஅடியில் இருந்து 20,178 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒரே நாளில் 1.82 அடி உயர்ந்து, அணையின் நீர்மட்டம் 75.260 அடியை எட்டி உள்ளது. அணையின் நீர்இருப்பு 37.395 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 700 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Heavy Rain in Water capture area results Mettur Dam's level increases to 75 feet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற