தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் நில அதிர்வு- பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நெல்லை மாவட்டம் தென்காசியில் நில அதிர்வு- வீடியோ

  நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்றுவட்ட வட்டாரப் பகுதிகளில் இன்று இரவு திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

  தென்காசி அருகே சிந்தாமனி, வடகரை, மேலகரம், பெரிய கோவில் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டுள்ளன.

  பொதுமக்கள் வெளியேற்றம்

  பொதுமக்கள் வெளியேற்றம்

  இதையடுத்து இது நில அதிர்வு என பொதுமக்கள் உணர்ந்தனர். இதனால் வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறினர்.

  கேரளா எல்லையிலும்

  கேரளா எல்லையிலும்

  வீடுகளை விட்டு வெளியே அலறியடித்து வெளியே வந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல் கேரளாவின் புனலூர், ஆரியங்காவு, தென்மலை பகுதிகளிலும் இத்தகைய நில அதிர்வு உணரப்பட்டிருக்கிறது.

  மிதமான நிலநடுக்கம்

  மிதமான நிலநடுக்கம்

  இந்த நிலநடுக்கமானது மிக மிக மிதமானது. ரிக்டரில் மிக மிக குறைவாக 2 அலகுகள்தான் பதிவாகி இருக்க வாய்ப்பிருக்கிறது என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

  பொதுமக்கள் அச்சம்

  பொதுமக்கள் அச்சம்

  கடந்த காலங்களிலும் மேக்கரை, அடவிநயினார் அணைப் பகுதிகளில் இதே போல் நில அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Mild tremors were felt in some villages of Nellai and Tenkasi.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற