சட்டசபை வளாகத்தில் தினகரனுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏக்கள்

Subscribe to Oneindia Tamil
  தினகரனுக்கு வரவேற்பு கொடுத்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்!- வீடியோ

  சென்னை : சட்டசபை வளாகத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனும் சந்தித்துக்கொண்டனர். தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கை குலுக்கி வாழ்த்தும் தெரிவித்தனர்.

  2018ம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி துவக்கி வைத்தார். இதில் ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார்.

  MK Stalin and TTV Dhinakaran meets in State Assembly

  இவருக்கு எதிர்கட்சி வரிசையில் 148ம் எண் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. கூட்டத்தொடர் ஆரம்பித்ததும் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆனால், டி.டி.வி தினகரன் ஆளுநர் உரை முடியும் வரை உள்ளேயே இருந்தார்.

  முன்னதாக சட்டசபைக்கு வந்த டி.டி.வி தினகரனும், எதிர்கட்சி தலைவரான ஸ்டாலின் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். தினகரனுக்கு திமுக எம்.எல்.ஏக்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். தினகரன் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு நன்றி கூறினார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  MK Stalin and TTV Dhinakaran meets in State Assembly. Tamilnadu State Assembly session starts today with Governor Banwarilal Purohit Welcome Speech.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற