For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செய்தி சேனல்களில் மோடிக்கு அதிக முக்கியத்துவம்: ஆய்வில் தகவல்

By Veera Kumar
|

சென்னை: செய்தி ஊடகங்களில் நரேந்திரமோடிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக, ஆய்வில் தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் செய்தி ஊடகங்கள் எந்த மாதிரியான செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன என்பது குறித்து சிஎம்எஸ் மீடியா லேப் என்ற அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அந்த

Modi got most prime-time coverage in tv channels : study

ஆய்வில், பிரைம் டைம் என்று கூறப்படும், இரவு 8 மணி முதல் 9.30 மணி வரையிலான காலகட்டத்தில், எந்த கட்சிக்கு அல்லது எந்த தலைவருக்கு செய்தி ஊடகங்கள் அதிக கவரேஜ்

கொடுத்துள்ளன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

செய்தி சேனல்கள் தங்களது நிகழ்ச்சிகளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நரேந்திரமோடியின் செய்திகளை ஒளிபரப்பவே செலவிட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. மொத்த நேரத்தில்

10 சதவீதம் ஆம் ஆத்மியின், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கிடைத்துள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்திக்கு 4.5 சதவீத நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் விரும்புவார்கள்

என்பதற்காக இவ்வாறு மோடிக்கு அதிகமாகவும், ராகுலுக்கு குறைவாகவும் நேரம் ஒதுக்கப்பட்டதாக தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியில்லாமல், மீடியாக்கள் ஒரு

சார்பு நிலையை எடுத்து செய்தி ஒளிபரப்பியதா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. இதுபோல பத்திரிகைகளிலும் பெரும்பாலான செய்திகள் மோடியை சார்ந்தே

வெளியாகியுள்ளன.

English summary
Prime ministerial hopeful Narendra Modi and his Bharatiya Janata Party got more than a third of all prime-time television coverage during this Lok Sabha election, significantly higher than any other politician and party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X