ஜெயலலிதா நலம் பெற பால்குடம்.... ஆயுள் ஹோமம்.... தொடரும் பிரார்த்தனைகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா விரைவில் உடல் நலம் பெற வேண்டி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் எம்.எல்.ஏ டாக்டர் வி.பி.பி.பரமசிவம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால் குடம் எடுத்து வந்து நரசிங்கபெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்தனர்.
தமிழக முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22ம் தேதி திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி அதிமுக தொண்டர்கள் சிறப்பு வழிபாடு மற்றும் பிரார்த்தனைகள் நடத்தி வருகின்றனர்.

சிறப்பு பிரார்த்தனை
சென்னை தியாகராய நகர் தேவி மாரியம்மன் கோயிலில், தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில், முதல்வர் பூரண நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி-சேலைகளும் வழங்கப்பட்டன.

தோஷ நிவாரண ஹோமம்
தென்சென்னை தெற்கு மாவட்டம், மயிலை பகுதிக் கழகம் சார்பில், மாதவபெருமாள் ஆலயத்தில் அபமிருத்ஞ்ய தோஷ நிவாரண ஹோமம் நடைபெற்றது. பின்னர் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், அமைச்சர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

பால்குடம்
காட்டுமன்னார்கோவில் அருகே அமைந்துள்ள அருள்மிகு அனந்தீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் இருந்து, பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் 108 பால்குடம் சுமந்து, 7 கிலோமீட்டர் தூரம் பாத யாத்திரையாக வந்து, மேலக்கடம்பூர் அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபாடு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் பெண்கள் உள்பட 508 பேர் பால்குடம் ஏந்தி முத்துமாரியம்மனுக்கு அபிசேகம் செய்து வழிபட்டனர்.

மிருத்யுஞ்சய யாகம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலின் நான்காம் பிரகாரத்தில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, மஹா மிருத்யுஞ்சய ஆயுஷ் யாகம் நடத்தப்பட்டது. கோவை புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் 24 வேதவிற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆயுள்யாகம், மிருத்யுஞ்சய யாகம் மற்றும் ருத்ரயாகம் உள்ளிட்ட யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பட்டீஸ்வரருக்கு மலர் அலங்கார பூஜை நடைபெற்றது.

வேடசந்தூர் எம்.எல்.ஏ
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால் குடம் எடுத்து வந்து நரசிங்கபெருமாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்.எல்.ஏ டாக்டர் வி.பி.பி.பரமசிவம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பழனி முருகனுக்கு அபிசேகம்
பழநி மலைக் கோயிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கு, ஜெ ஜெயலலிதா பேரவை சார்பில், ஏராளமான அதிமுகவினர் பால்குடம் சுமந்துசென்று மூலவருக்கு பாலாபிசேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மசூதிகள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications