For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லைசென்ஸ் இல்லாமல் கொசுவலை தயாரிக்கும் நிறுவனங்கள்.. நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் உரிமம் இல்லாமல் இயங்கும் கொசுவலை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வேளாண் துறையினரிடமும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினரிடம் மனு அளித்தனர்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட கொசுவலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Mosquito net producers face hurdle from illegal makers

இந்நிலையில் சில கொசுவலை நிறுவனங்கள் சட்டத்திற்கு புறம்பாக உரிய லைசன்ஸ் இல்லாமல் கொசுவலையை இயக்கி வருகின்றனர். இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பலர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள வேளாண் துறை இணை இயக்குநரிடமும், கரூர் மாவட்ட மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடமும் தமிழ்நாடு கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்து இந்த செயலுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கொசுவலை நிறுவனங்களில் வேலை நிறுத்தம் தொடர்ந்தால் சுமார் நாள் ஒன்றுக்கு ரூ 1 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

English summary
Mosquito net producers have demanded to take action against illegal makers in Karur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X