முத்துகிருஷ்ணன் சாவுக்கு நீதி விசாரணை வேண்டும்.. சேலத்தில் உறவினர்கள் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சேலம் சாமிநாதப்புரத்தைச் சேர்ந்த ஜீவானந்தத்தின் மகன் முத்துக்கிருஷ்ணன். 30 வயதான இவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆய்வு படிப்பு படித்து வந்தார்.

ஹோலி கொண்டாட்டத்திற்காக திங்கள்கிழமை டெல்லியில் முனிர்கா என்ற இடத்தில் உள்ள தனது நண்பர் அறைக்கு சென்றுள்ளார். பின்னர் மர்மமான முறையில் அந்த வீட்டின் அறையில் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டார். முத்துகிருஷ்ணன் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Muthukrishnan family wants judicial proof

இந்நிலையில், முத்துகிருஷ்ணன் சாவு பற்றி நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி, சேலம் நாலு ரோடு சந்திப்பில், ஜனநாயக வாலிபர் சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், முத்துகிருஷ்ணனின் உறவினர்களும், நேற்றிரவு போராட்டம் நடத்தினர். போலீசார் வேண்டுகோளை ஏற்று பிறகு கலைந்து சென்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Muthukrishnan family wants judicial proof in his mysteries death.
Please Wait while comments are loading...