ஓ.பி.எஸ். - எடப்பாடி(சசிகலா) போட்டியால்.. மீண்டும் உடைகிறது அதிமுக... !

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், சசிகலாவுக்கும் இடையிலான போட்டியால் ஒருமுறை உடைந்த அதிமுக தற்போது மீண்டும் உடையப் போகிறது.

புதிய சட்டசபை அதிமுக தலைவராக எடப்பாடி பழிச்சாமியை சசிகலா குரூப் தேர்வு செய்துள்ளது. இதனால் அவர் ஆட்சியமைக்க உரிமை கோரப் போகிறார். எனவே அவருக்கும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் வெடிக்கவுள்ளது. இதனால் மீண்டும் அதிமுக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் கட்சியை பிளவுபடுத்துமா அல்லது சசிகலா குரூப்பில் இதுவரை இருந்து வந்த எம்.எல்.ஏக்கள் அணி மாறி ஓ.பி.எஸ் பக்கம் வருவார்களா என்று தெரியவில்லை.

கூவத்தூரில்சிக்கிய எம்.எல்.ஏக்கள்

கூவத்தூரில்சிக்கிய எம்.எல்.ஏக்கள்

தற்போது கூவத்தூரில் சிக்கியுள்ளவர்களில் பலரும் முதல்வர் ஓ.பி.எஸ் அணிக்கு வரத் துடித்துக் கொண்டிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கூறி வந்தன. அப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வராத சமயம்.

எடப்பாடியை ஆதரிப்பார்களா?

எடப்பாடியை ஆதரிப்பார்களா?

அப்போதே சசிகலா தலைமையை விரும்பாத அவர்கள் தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டு விட்டதால் எடப்பாடியை எப்படி ஏற்பார்கள் என்பது தெரியவில்லை. நிச்சயம் அவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் வரவே முயல்வார்கள் என்று தெரிகிறது.

கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள்

கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள்

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் வேண்டுமானால் எடப்பாடியை ஆதரிக்க முன்வரக் கூடும். ஜாதியை முன்வைத்து இந்த முடிவுக்கு அவர்கள் வர முயற்சிக்கலாம். ஆனால் எந்த அளவுக்கு இது ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை.

தென் மாவட்ட எம்.எல்.ஏக்கள்

தென் மாவட்ட எம்.எல்.ஏக்கள்

முக்குலத்தோர் சமூக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலும் ஓ.பி.எஸ்ஸையே ஆதரிக்க முன்வரக் கூடும். அதேபோல தென் மாவட்ட எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ் பக்கம் வர முடிவெடுக்கலாம்.

அதிமுக நிச்சயம் உடையும்

அதிமுக நிச்சயம் உடையும்

கொங்கு மண்டலம், தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பக்கம் பிரிந்து போகலாம் என்று பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. இது எந்த அளவுக்கு சரியாக வரும் என்று தெரியவில்லை. மொத்தத்தில் இப்போதைக்கு தமிழக அரசியல் குழப்பம் முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதிமுக உடைவதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After Minister Edappady Palanichmay elected as the leader of the ADMK's legislature party a new rift is brewing in ADMK between CM OPS and Edappadi.
Please Wait while comments are loading...