நீட் தேர்வு: முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் எவருமே இடம்பெறாத துயரம்- லிஸ்ட் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் தேர்வு தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை காவு வாங்கிவிட்டது என்றே சொல்லலாம். இன்று வெளியிடப்பட்ட ரேங்க் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர் ஒருவர் கூட இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான பொதுநுழைவுத் தேர்வான 'நீட்' முடிவுகள் இன்று வெளியாகின. தமிழகம் அஞ்சியபடியே ரேங்க் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் எவருமே இல்லை.

None of TN Students in Neet Top 25 Rank linst

பஞ்சாப் மாநிலத்தின் நவ்தீப்சிங் என்கிற மாணவர்தான் முதலிடம் பெற்றிருக்கிறார். நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் தமிழக மாணவர்களை இந்த நீட் தேர்வு முடிவுகள் வஞ்சித்துவிட்டன; அவர்களது மருத்துவ கனவுகளை காவு வாங்கிவிட்டது.

சிபிஎஸ்இ பாடங்களில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக தேர்வு எழுதியபோதே தமிழக மாணவர்கள் கூறியிருந்தனர். டாப் 25 மாணவர்களும் மாநிலங்களும்:

1) நவ்தீப்சிங்- பஞ்சாப்
2) அர்ச்சித் குப்தா- ம.பி
3) மணிஷ் முல்சந்தானி- ம.பி
4) சங்கீத் சதானந்தா- கர்நாடகா
5) டோக்ரா அபிஷேக் வீரேந்திரா- மகாராஷ்டிரா
6) டெரிக் ஜோசப்- கேரளா
7)கனீஷ் தயாள்- ஹரியானா
8) நிகிதா கோயல்- பஞ்சாப்
9) ஆர்யன் ராஜ்சிங்- உ.பி.
10) தனீஷ் பன்சால்- பஞ்சாப்
11) நிஷிதா புரோகித்- குஜராத்
12) லக்கிம்சேதி - தெலுங்கானா
13) அனுஜ் குப்தா- ம.பி.
14) நாரெட்டி மன்விதா- ஆந்திரா
15) ஹரிஷ் ஆனந்த் - மே.வங்கம்
16) ஹர்ஸ் அகர்வால்- பீகார்
17) சாவி ஹர்கவத்- ராஜஸ்தான்
18) நடா பாதிமா- கேரளா
19) புவனேஷ் ஷர்மா- உபி
20) வன்ஷிகா அரோரா- டெல்லி
21) மரியா பிஜி வர்கீஷ்- கேரளா
22) அதிதி கோயல்- ஹரியானா
23) விஷ்னு சிங்கால்- குஜராத்
24) மன்கானி தீபிகா- தெலுங்கானா
25) அபிநீத் மாத்தூர்- டெல்லி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The details of the top 25 candidates in Neet Exam.
Please Wait while comments are loading...