அறந்தாங்கி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பலி, மனைவி படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த முதியவர் பாலையா பலியானார், அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள அந்தோணி பகுதியை சேர்ந்தவர் பாலையா. அவரின் வீட்டின் பின்புறம் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது.

Old man electrocuted near Aranthangi

மின்கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் அதை அவர் மிதித்துவிட்டார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். மின்சாரம் தாக்கி அவரின் மாடும் இறந்துவிட்டது.

மின்சாரம் தாக்கியதில் பாலையாவின் மனைவி படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி கொடுங்கையூரில் 2 சிறுமிகள், திருவாரூரில் ஒருவர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
An old man named Balaiya died after he stepped on a live wire near his house in Pudukottai district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற