For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் ரேங்க் பட்டியலில் ஷாக்கிங்.. டாப் 20ல் 5 பேர் மட்டுமே மாநில பாடத் திட்ட மாணவர்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் ரேங்க் பட்டியலை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். அரசு இடங்களுக்கான முதல் 20 மாணாக்கர் பட்டியலை ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.

அரசு இடங்களுக்கான முதல் 20 மாணாக்கர் பட்டியலில், 5 பேர் மட்டுமே மாநில பாடத் திட்டத்தில் பயின்றவர்கள்.

மாநில பாடத்திட்டம் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இல்லை என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை நிரூபிப்பதை போல இந்த பட்டியல் அமைந்துள்ளது.

ரேங்க் பட்டியல்

ரேங்க் பட்டியல்

இந்த பட்டியலில் ஒசூரை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் முதலிடமும், முகேஷ் கண்ணா, சையது ஹபீஸ் ஆகியோர் முறையே 2 மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளனர்.

மாணவர்கள் ஆதிக்கம்

இந்த பட்டியலில் மாணவிகளை விட மாணவர்களே அதிக இடங்களை பிடித்துள்ளனர். இது பிளஸ்டூ அல்லது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுடன் ஒப்பிட்டால் வித்தியாசமான ரிசல்ட்டாக பார்க்கப்படுகிறது. அவற்றில் மாணவிகள்தான் ஆதிக்கம் செலுத்துவர்.

மாணவர்கள் தயாராகவில்லை

மாணவர்கள் தயாராகவில்லை

இந்நிலையில், முதல் 20 இடங்களில் 5 பேர் மட்டுமே மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் என்பது கல்வியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை எதிர்கொள்ள மாநில பாடத் திட்ட மாணவர்கள் தயாராகவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாண்டு மட்டும் படித்தவர்களா?

இவ்வாண்டு மட்டும் படித்தவர்களா?

மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் என்ற பட்டியலில், கடந்த ஆண்டு முயற்சி செய்து வெற்றி பெற முடியாதவர்களும் உள்ளனர். எனவே இவ்வாண்டு மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே இந்த 5 பேர்களும் என்பதையும் உறுதியாக தெரிவிக்க முடியாது. எனவே மொத்தமாக பார்த்தால் மாநில பாடத் திட்டத்தி்ல் படித்தவர்கள் அதிக மதிப்பெண்களை பெற முடியவில்லை என்பது தெளிவாகிறது.

English summary
Only 5 state students at the top 20 rank of NEET which shows low level of preparation by the state sylubus students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X