தஞ்சையில் ஓபிஎஸ் அணியின் பேனர்கள் கிழிப்பு.. பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: தஞ்சையில் ஓபிஎஸ் அணியினரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஓபிஎஸ் அணி சார்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் அணியினர் மாவட்டம் தோறும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை தஞ்சையில் ஓபிஎஸ் தலைமையில் அந்த அணி சார்பில் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

OPS banners tared and damaged in Thanjavur

இதற்காக திலகர் திடலில் அவரது அணியினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மேலும் ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும் அவரை வரவேற்றும் அப்பகுதியில் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அந்த பேனர்களை சிலர் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் அணியினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பேனர்களை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
OPS banners tared and damaged in Thanjavur. OPS team conducts meet in Thanjavur tomorrow. OPS supporters keeps banners in the area.
Please Wait while comments are loading...