For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அங்கிட்டு சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோர... இங்கிட்டு 'தொண்டர் தரிசனம்' தந்த ஓபிஎஸ்!

ராஜ்பவனில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரிய நேரத்தில் தம்முடைய இல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளை நேரில் பெற்றார் முதல்வர் ஓபிஎஸ்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இல்லம் முன்பு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். ராஜ்பவனில் சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரிய அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார். அவருடன் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் சென்றனர். இந்த சந்திப்பு 30 நிமிடம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் சூழல் பற்றி தெரிவிக்கபட்டதாக கூறப்படுகிறது. தான் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ததாகவும் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

ops meets supporters

ஆளுநர் சந்திப்புக்கு பின்னர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், தமிழகத்தில் நடக்கும் விவகாரங்களை ஆளுநரிடம் தெரிவித்து உள்ளோம். நம்பிக்கை உள்ளது. நல்லதே நடக்கும். தர்மம் வெல்லும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என கூறினார்.

தொடர்ந்து தமது இல்லம் முன்பு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்று வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். ஏராளமான தொண்டர்கள் வரிசையில் நின்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வம் இல்லம் முன்பு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா தரப்பு ஆளுநரை சந்திக்க சென்றுள்ளதால் அதன் பின்னரே தமது கருத்தை ஓ.பன்னீர் செல்வம் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamilnadu chief minister o.pannerselvam meets his supporters in front oh his house
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X